ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் ரூ.80க்கு குறைவான விலையில் பல திட்டங்களை வழங்குகிறது. அதிக இணையம் பயன்படுத்துவோருக்கு இந்த திட்டங்கள் சிறந்த தேர்வாக உள்ளன.
15

Image Credit : Gemini
ஜியோ ரீசார்ஜ் திட்டம்
இணைய பயன்பாடு அதிகரித்து வரும் நிலையில், மலிவு விலையில் அதிக டேட்டா வழங்கும் ரீசார்ஜ் திட்டங்களுக்கு பயனர்கள் அதிக ஆர்வம் காட்டுகின்றனர். அந்த வகையில், ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் ரூ.80க்கு குறைவான விலையில் சில சுலபமான டேட்டா ஆட்-ஆன் திட்டங்களை வழங்குகிறது. குறிப்பாக தினமும் அதிகமாக இணையத்தை பயன்படுத்துபவர்களுக்கு இந்த திட்டங்கள் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
25
Image Credit : Pinterest
ஜியோ டேட்டா பிளான்
இந்த பட்டியலில் முதலில் குறிப்பிடப்படுவது ரூ.39 டேட்டா பிளான். இந்த திட்டத்தில் பயனர்களுக்கு தினமும் 3ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது. குறைந்த விலையில் அதிக அளவு டேட்டா தேவைப்படும் பயனர்களுக்கு இது ஒரு நல்ல விருப்பமாக உள்ளது. இதேபோல், சில திட்டங்களில் கூடுதல் சலுகைகளும் வழங்கப்படுகின்றன.
35
Image Credit : Pinterest
ஜியோ மலிவான டேட்டா பேக்
ஜியோ நிறுவனத்தின் ரூ.19 டேட்டா பிளான் மிகவும் குறைந்த விலையிலான add-on திட்டமாகும். இந்த திட்டத்தின் காலாவதி (செல்லுபடியாகும்) ஒரு நாள் மட்டுமே. அந்த ஒரு நாளுக்குள் பயனர்கள் 1ஜிபி இணைய டேட்டாவை பயன்படுத்திக்கொள்ளலாம். குறுகிய காலத்திற்கு டேட்டா தேவைப்படும் பயனர்களுக்கு இது ஒரு வசதியான தேர்வாக உள்ளது.
45
Image Credit : Pinterest
ஜியோ டேட்டா பேக்
மேலும், ரூ.29 டேட்டா பிளான் இரண்டு நாட்கள் செல்லுபடியாகும். இதில் மொத்தமாக 2ஜிபி இணைய டேட்டா வழங்கப்படுகிறது. மேலும், ரூ.49 டேட்டா பிளான் ஒரு நாள் செல்லுபடியாகும் உடன் வருகிறது. இதில் பயனர்களுக்கு மொத்தமாக 25ஜிபி இணைய டேட்டா கிடைக்கும். அதிக வேகத்தில் டேட்டா பயன்படுத்த வேண்டியவர்களுக்கு இது சிறந்த திட்டமாக கருதப்படுகிறது.
55
Image Credit : Google
ஜியோ டேட்டா ரீசார்ஜ்
இதற்கு மேலாக, ரூ.69 டேட்டா பிளான் ஏழு நாட்கள் செல்லுபடியாகும் மற்றும் மொத்தமாக 6ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது. அதே நேரத்தில் ரூ.77 டேட்டா பிளான் ஐந்து நாட்கள் செல்லுபடியாகும் உடன் தினமும் 3ஜிபி டேட்டா வழங்குகிறது. இந்த திட்டத்தில் கூடுதலாக Sony Liv ஓடிடி சேவைக்கான அணுகலும் வழங்கப்படுகிறது. இதனால் குறைந்த விலையில் அதிக டேட்டா தேவைப்படுவோருக்கு இந்த ஜியோ திட்டங்கள் நல்ல தேர்வாக உள்ளன.
ஸ்மார்ட்போன்கள் மற்றும் AI முதல் சைபர் பாதுகாப்பு, அறிவியல் முன்னேற்றங்கள் வரை — சமீபத்திய தொழில்நுட்ப (Technology News in Tamil) அப்டேட்களை தொடர்ச்சியாக பெறுங்கள். டிஜிட்டல் டிரெண்ட்ஸ் குறித்து நிபுணர்களின் கருத்துகள், விரிவான தகவல்கள் மற்றும் பிரேக்கிங் நியூஸை வழங்கும் ஒரே தளம் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸ்.புதிய கேஜெட் ரிலீஸ் ஆனதா? புதிய ஸ்டார்ட்அப்புகள் வந்தவையா? எதிர்காலத்தை மாற்றக்கூடிய எந்த டெக் பாலிஸி வந்துள்ளது? இவை அனைத்திற்கும் சிறு சிறு தகவல்கள் இங்கு கிடைக்கும். டெக் விளக்கக் குறிப்புகள் மற்றும் கேஜெட் டெமோ வீடியோக்களையும் நீங்கள் பார்க்கலாம்.
.png)
1 day ago
16





English (US) ·