பிப்ரவரி மாதம் விருப்ப மனுக்கள் பெறப்பட்ட நிலையில், அவற்றில் இருந்து ஏற்கெனவே 50 வேட்பாளர்களை விஜய் இறுதி செய்துவிட்டதாகக் கூறப்படுகிறது. - படம்: தினமணி
சென்னை: தவெக சார்பில் சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட, விருப்ப மனு அளித்தவர்களிடம் செவ்வாய்க்கிழமை (மார்ச் 10) முதல் நேர்காணல் தொடங்கியது. நேர்காணலை அக்கட்சித் தலைவர் விஜய் தொடங்கிவைத்தார்.
கட்சி கொள்கைகளுக்கு வலுசேர்க்கும் வகையில் நல்ல, தகுதியான வேட்பாளர்கள் தேர்வு செய்யப்படுவர் என ஏற்கெனவே விஜய் அறிவித்திருந்தார்.
அதை உறுதிசெய்யும் வகையில் வேட்பாளர் தேர்வில் அவரே களமிறங்கி இருப்பது தவெக தொண்டர்கள் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தி உள்ளது.
பிப்ரவரி மாதம் பெறப்பட்ட விருப்ப மனுக்களில் இருந்து ஏற்கெனவே 50 வேட்பாளர்களை விஜய் இறுதி செய்துவிட்டதாகக் கூறப்படுகிறது.
அந்த 50 வேட்பாளர்களையும் விஜய் பனையூர் கட்சி அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை சந்தித்துப் பேசியதாகவும் தெரிகிறது.
இதனிடையே, ஒவ்வொரு தொகுதிக்கும் மூன்று பேரை முதற்கட்டமாகத் தேர்வு செய்துள்ள தவெக தலைமை, இறுதியில் அவர்களில் ஒருவரை வேட்பாளராக அறிவிக்கும் என விவரம் அறிந்தவர்கள் கூறுகின்றனர்.
அக்கட்சியின் முக்கியமான நிர்வாகிகளான புஸ்ஸி ஆனந்த் - தியாகராய நகர், அருண்ராஜ் - திருச்செங்கோடு, ராஜ்மோகன் - எழும்பூர், மரிய வில்சன் - திருவொற்றியூர் ஆகிய தொகுதிகளுக்கான நேர்காணலில் பங்கேற்றதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஏற்கெனவே தேர்வு செய்யப்பட்ட 50 வேட்பாளர்களையும் தங்கள் தொகுதியில் பணிகளைத் தொடங்குமாறு விஜய் அறிவுறுத்தியுள்ளார்.
பல்வேறு கட்டங்களாக வேட்பாளர்கள் பட்டியல் தவெக தலைமையால் அதிகாரபூர்வமாக வெளியிடப்படும் எனத் தெரிகிறது.
.png)





English (US) ·