Last Updated:Mar 09, 2026 5:57 PM IST
தோட்டத்து வீட்டில் வசித்துவந்த முதியவரை கொலை செய்துவிட்டு, மூதாட்டியை பாலியல் வன்கொடுமை செய்த கொடூர சம்பவம் ஊத்தங்கரை பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கிருஷ்ணகிரி அருகே முதியவரை கொலை செய்து, மூதாட்டியை பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கிய சம்பவம் பதைபதைக்க வைத்துள்ளது. தனியாக வசித்த முதிய தம்பதிக்கு நேர்ந்த கொடூரத்தின் பின்னணி என்ன?
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அருகே உள்ள கிராமத்தில் 70 வயது முதியவர், 60 வயதான தனது மனைவியுடன் வசித்து வந்துள்ளார். இருவரும் ஊருக்கு சற்று தொலைவில் உள்ள தோட்டத்து வீட்டில் தனியாக வசித்து வந்தனர். ஞாயிற்றுக்கிழமை இரவில் முதியவர் வீட்டுக்கு வெளியே தூங்கியுள்ளார். அவரது மனைவி வீட்டிற்கு உள்ளே படுக்கை அறையில் அயர்ந்து தூங்கியுள்ளார். நள்ளிரவு நேரத்தில் மர்ம நபர் ஒருவர் அங்கு வந்துள்ளார்.
வந்த வேகத்தில் முற்றத்தில் தூங்கிக் கொண்டிருந்த முதியவரின் தலையில் பலமாக தாக்கியுள்ளார். அவரது அலறல் சத்தம் கேட்டு உள்ளே இருந்த மனைவி, பதறியடித்துக் கொண்டு வெளியே ஓடி வந்துள்ளார். அதற்குள் சுதாரித்த மர்ம நபர், மூதாட்டியை வலுக்கட்டாயமாக வீட்டிற்குள் இழுத்துச் சென்றுள்ளார். அவர் சத்தம் போட்டதும் கடுமையாக தாக்கி பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறப்படுகிறது. இருவரின் அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் வந்துள்ளனர். அதைக் கண்டு மர்ம நபர், அங்கிருந்து தப்பியோடியுள்ளார்.
பின்னர், ரத்த வெள்ளத்தில் உயிருக்குப் போராடிய முதியவர் மற்றும் அவரது மனைவியை மீட்டு, ஊத்தங்கரை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு முதியவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். அவரது மனைவி, மேல்சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். இந்த சம்பவம் குறித்து சிங்காரப்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்து, கொடூர செயலில் ஈடுபட்ட மர்ம நபரைப் பிடிக்க தேடுதல் வேட்டையை தீவிரப்படுத்தினர்.
மூதாட்டி பாலியல் வன்கொடுமை... கணவரை கொன்று அரங்கேறிய அட்டூழியம்... வீடு புகுந்து மர்ம நபர் வெறிச்செயல்...
.png)





English (US) ·