மாஸ் காட்டும் OnePlus 13R... அமேசானில் அறிவிக்கப்பட்ட தாறுமாறு ஆஃபர்! ஸ்டாக் தீரும் முன் புக் பண்ணுங்க!

18 hours ago 23

OnePlus 13R அமேசான் சிறப்பு விற்பனையில் OnePlus 13R ஸ்மார்ட்போனுக்கு அதிரடி விலைக்குறைப்பு! ரூ.7,000 தள்ளுபடியுடன் ரூ.37,999-க்கு வாங்குவது எப்படி? முழு விவரம் உள்ளே.

14

OnePlus 13R

Image Credit : Gemini

OnePlus 13R

புதிய ஸ்மார்ட்போன் வாங்கத் திட்டமிட்டுள்ளீர்களா? அதுவும் ஒன்பிளஸ் (OnePlus) பிராண்டில் ஒரு ப்ரீமியம் போனை நடுத்தர பட்ஜெட்டில் வாங்க நினைப்பவர்களுக்கு இது ஒரு பொன்னான வாய்ப்பு. தற்போது அமேசான் தளத்தில் நடைபெற்று வரும் 'எலக்ட்ரானிக்ஸ் பிரீமியர் லீக்' (Amazon Electronics Premier League) விற்பனையில், ஒன்பிளஸ் 13R ஸ்மார்ட்போனுக்கு நம்ப முடியாத அளவில் மிகப்பெரிய விலைக்குறைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.

மார்ச் 6 முதல் மார்ச் 12 வரை நடைபெறும் இந்தச் சிறப்பு விற்பனையில், பல்வேறு பிராண்டுகளின் ஸ்மார்ட்போன்களுக்கு 40% வரை தள்ளுபடி வழங்கப்படுகிறது. இதில் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது OnePlus 13R மாடல்தான்.

24

ரூ.44,999 போன் இப்போது ரூ.37,999-க்கு!

Image Credit : @Pmkphotoworks/X

ரூ.44,999 போன் இப்போது ரூ.37,999-க்கு!

இந்தியாவில் அறிமுகம் செய்யப்படும்போது OnePlus 13R-ன் ஆரம்ப விலை ரூ.44,999 ஆக நிர்ணயிக்கப்பட்டிருந்தது. ஆனால், தற்போதைய அமேசான் சேலில் இது ரூ.39,999 என்ற விலையில் பட்டியலிடப்பட்டுள்ளது. அதாவது நேரடியாக ரூ.5,000 தள்ளுபடி!

இது மட்டுமின்றி, தேர்ந்தெடுக்கப்பட்ட வங்கி கார்டுகளைப் பயன்படுத்தி வாங்குபவர்களுக்கு கூடுதலாக ரூ.2,000 பேங்க் டிஸ்கவுண்ட் (Bank Discount) வழங்கப்படுகிறது. இரண்டையும் சேர்த்துப் பார்த்தால், மொத்தம் ரூ.7,000 தள்ளுபடியுடன் இந்த ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போனை வெறும் ரூ.37,999-க்கு உங்களால் சொந்தமாக்கிக் கொள்ள முடியும்.

34

பிரம்மிக்க வைக்கும் டிஸ்ப்ளே மற்றும் ப்ராசஸர்

Image Credit : OnePlus, iQOO website

பிரம்மிக்க வைக்கும் டிஸ்ப்ளே மற்றும் ப்ராசஸர்

இந்த விலைக்கு இந்த போன் வொர்த் தானா? என யோசிப்பவர்களுக்கு அதன் சிறப்பம்சங்களே பதில் சொல்கின்றன. இதில் 6.78 இன்ச் அளவிலான 1.5K ரெசல்யூஷன் கொண்ட LTPO AMOLED டிஸ்ப்ளே வழங்கப்பட்டுள்ளது. 120Hz ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் 4,500 நிட்ஸ் (nits) பீக் பிரைட்னஸ் இருப்பதால் கேமிங் மற்றும் வீடியோ அனுபவம் வேற லெவலில் இருக்கும்.

செயல்திறனைப் பொறுத்தவரை, இதில் அதிவேக குவால்காம் ஸ்னாப்டிராகன் 8 Gen 3 (Qualcomm Snapdragon 8 Gen 3) ப்ராசஸர் பொருத்தப்பட்டுள்ளது. 12GB ரேம் மற்றும் 256GB ஸ்டோரேஜ் ஆப்ஷனுடன் வரும் இந்த போன், ஆண்ட்ராய்டு 15-ஐ அடிப்படையாகக் கொண்ட லேட்டஸ்ட் ஆக்ஸிஜன் ஓஎஸ் 15-ல் (OxygenOS 15) இயங்குகிறது.

44

50MP கேமரா மற்றும் பிரம்மாண்டமான பேட்டரி

Image Credit : OnePlus, iQOO website

50MP கேமரா மற்றும் பிரம்மாண்டமான பேட்டரி

கேமரா பிரியர்களுக்காகவே பின்பக்கத்தில் 50MP மெயின் கேமரா (OIS வசதியுடன்), 50MP டெலிஃபோட்டோ லென்ஸ் மற்றும் 8MP அல்ட்ரா-வைடு கேமரா என டிரிபிள் கேமரா செட்டப் வழங்கப்பட்டுள்ளது. செல்ஃபிக்களுக்காக 16MP முன்பக்க கேமராவும் உள்ளது.

இவற்றை எல்லாம் நாள் முழுவதும் தடையின்றி இயக்க, 80W ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியுடன் கூடிய 6000mAh பிரம்மாண்டமான பேட்டரி இதில் கொடுக்கப்பட்டுள்ளது. மேலும், AI Eraser, AI Unblur போன்ற பல ஏஐ (AI) சிறப்பம்சங்களும் இந்த போனில் உள்ளதால், ரூ.37,999-க்கு இது ஒரு மிகச்சிறந்த சாய்ஸ் என்பதில் சந்தேகமில்லை!

ஸ்மார்ட்போன்கள் மற்றும் AI முதல் சைபர் பாதுகாப்பு, அறிவியல் முன்னேற்றங்கள் வரை — சமீபத்திய தொழில்நுட்ப (Technology News in Tamil) அப்டேட்களை தொடர்ச்சியாக பெறுங்கள். டிஜிட்டல் டிரெண்ட்ஸ் குறித்து நிபுணர்களின் கருத்துகள், விரிவான தகவல்கள் மற்றும் பிரேக்கிங் நியூஸை வழங்கும் ஒரே தளம் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸ்.புதிய கேஜெட் ரிலீஸ் ஆனதா? புதிய ஸ்டார்ட்அப்புகள் வந்தவையா? எதிர்காலத்தை மாற்றக்கூடிய எந்த டெக் பாலிஸி வந்துள்ளது? இவை அனைத்திற்கும் சிறு சிறு தகவல்கள் இங்கு கிடைக்கும். டெக் விளக்கக் குறிப்புகள் மற்றும் கேஜெட் டெமோ வீடியோக்களையும் நீங்கள் பார்க்கலாம்.

Read Entire Article