மனைவியை கிண்டல் செய்த நண்பன்... மது விருந்தின்போது கழுத்தை அறுத்துக் கொன்ற நண்பர்கள்...

23 hours ago 17

Last Updated:Mar 09, 2026 5:03 PM IST

சிவகங்கை மாவட்டம் மானாமதுரை - அனந்தபுரம் பைபாஸ் அருகே குடும்பத்துடன் வசித்துவந்த முனீஸ்வரன் என்பவர், தனது நண்பரான சதீஷ் என்பவரின் வீட்டு மாடியில் மது அருந்தியபோது, கொடூரமான முறையில் கழுத்தறுத்து கொலை செய்யப்பட்டுள்ளார்.

கொலையான முனீஷ்வரன்
கொலையான முனீஷ்வரன்

மானாமதுரையில் மனைவியை தவறாக பேசிய ஆட்டோ ஓட்டுநரை அவரது உயிர் நண்பர்களே கழுத்தறுத்து கொலை செய்துள்ளனர். பீர் பாட்டிலை உடைத்து கழுத்தை அறுத்து வெறிச்செயலில் ஈடுபட்டதன் திடுக்கிடும் பின்னணி என்ன?

சிவகங்கை மாவட்டம் மானாமதுரை - அனந்தபுரம் பைபாஸ் அருகே குடும்பத்துடன் வசித்துவந்தவர் முனீஸ்வரன். சம்பவத்தன்று தனது நண்பரான சதீஷ் என்பவரின் வீட்டு மாடியில் மது அருந்தியவர், மிகவும் கொடூரமான முறையில் கழுத்தறுத்து கொலை செய்யப்பட்டுள்ளார். இந்த தகவல் கிடைத்துச்சென்ற போலீசார், கொலை செய்யப்பட்டவரின் சடலத்தை மீட்டு உடற்கூராய்விற்காக அனுப்பி வைத்தனர்.

பின்னர் முனீஸ்வரனை கொன்ற கொலையாளி யார்? உடன் மது அருந்தியவர்கள் எங்கே? என பல்வேறு கோணங்களில் விசாரிக்கும்போது இக்கொடூர சம்பவத்திற்கான துப்பு கிடைத்துள்ளது. அதில் வீட்டின் உரிமையாளரான சதீஷ் மற்றும் அவரது நண்பரான கார்த்திகேயன் ஆகிய இருவரைப் பிடித்து போலீசார் விசாரித்துள்ளனர்.

ஆரம்பத்தில் முன்னுக்குப் பின் முரணாகப் பேசியவர்கள், போலீசாரின் அதட்டலில் கொலைக்கான உண்மை பின்னணியை வெட்ட வெளிச்சமாக்கினர். சம்பவத்தன்று இரவு 9 மணி அளவில் மாடியில் பிரியாணியுடன் மது விருந்து நடந்துள்ளது. அப்போது போதை மயக்கத்தில் சதீஷின் மனைவியை முனீஸ்வரன் தவறாக பேசி எல்லைமீறியுள்ளார். அதில் ஆத்திரம் அடைந்த சதீஷ் முனீஸ்வரனை கண்டித்துள்ளார்.

போலீஸ் விசாரணையில், இச்சம்பவம் உறுதியாக கார்த்திகேயன் மற்றும் சதீஷ்குமார் ஆகிய இருவரையும் கைது செய்த போலீசார் அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Read Entire Article