மதுரை எய்ம்ஸ்... அனுமதிக்கப்பட்ட பணியிடங்களே நிரப்பப்படவில்லை... மத்திய அமைச்சகம் தகவல்!

1 day ago 16

Last Updated:Mar 09, 2026 4:22 PM IST

தகுதியான நபர்களைக் கொண்டு இந்த இடங்களை நிரப்ப முன்னுரிமை அளிக்கப்பட்டு வருவதாக மத்திய அமைச்சகம் தகவல்.

மதுரை எய்ம்ஸ்
மதுரை எய்ம்ஸ்

மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பணியிடங்களில் 113 இடங்கள் இன்னும் நிரப்பப்படாமல் காலியாக இருப்பதாக மத்திய சுகாதார அமைச்சகம் அதிகாரப்பூர்வமாகத் தெரிவித்துள்ளது.

நாடாளுமன்றத்தில் எழுத்துப்பூர்வமாக தாக்கல் செய்யப்பட்ட பதிலில், மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கான பணியாளர் நியமனம் குறித்த விரிவான புள்ளிவிவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன. அதன்படி, மொத்த அங்கீகரிக்கப்பட்ட இடங்கள் 750 என்றும் தற்போதைய நியமன ஆணை வழங்கப்பட்டவை 183 இடங்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மதுரை எய்ம்ஸ்

இதுவரை 70 பேர் மட்டுமே பணியில் இணைந்துள்ளதாகவும் இதனால் 113 இடங்கள் காலியாக உள்ளதாகவும் மத்திய அரசு விளக்கம் தந்துள்ளது. இந்தக் காலியிடங்களை விரைவாக நிரப்புவதற்குத் தேவையான பல்வேறு ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை மத்திய அரசு எடுத்து வருவதாக சுகாதார அமைச்சகம் உறுதியளித்துள்ளது. தகுதியான நபர்களைக் கொண்டு இந்த இடங்களை நிரப்ப முன்னுரிமை அளிக்கப்பட்டு வருவதாகவும் குறிப்பிட்டுள்ளது.

Read Entire Article