"த்ரிஷாவுக்கு எனது வாழ்த்துக்களும் பாராட்டுகளும்" - நடிகர் பார்த்திபன் வெளியிட்ட வீடியோ... கூறியது என்ன? | Vijay - Trisha

1 day ago 19

Last Updated:Mar 09, 2026 4:15 PM IST

Trisha | விஜயும் த்ரிஷாவும் ஒன்றாக திருமண நிகழ்ச்சியில் பங்கேற்றது குறித்து சர்ச்சையாக பேசியிருந்த நிலையில் த்ரிஷாவுக்கு பாராட்டுக்கள் தெரிவித்துள்ளார் நடிகர் பார்த்திபன்.

 நடிகையுடன் விஜய் திருமணத்தை மீறிய உறவில் உள்ளதாக குற்றஞ்சாட்டி அவரது மனைவி சங்கீதா விவாகரத்து கோரியுள்ளார். இந்நிலையில் விஜயும் த்ரிஷாவும் ஒன்றாக திருமண நிகழ்ச்சியில் பங்கேற்றது சர்ச்சைக்குள்ளாகி உள்ளது.

 இதற்கிடையே, நிகழ்ச்சி ஒன்றில் பேசிய பார்த்திபன், குந்தவை இப்போது வீட்டுக்குள்ளேயே குந்தவைக்கப்பட்டால் நல்லது என்று குந்தவை கெட்டப்பில் காண்பிக்கப்பட்ட த்ரிஷா படம் குறித்து கருத்து தெரிவித்திருந்தார்.

 இதற்கு தனது எக்ஸ் பக்கத்தில் எதிர்வினையாற்றிய நடிகை த்ரிஷா, அடிப்படை அறிவு இல்லாமல் பேசப்படும் தரம் தாழ்ந்த சொற்கள் யாரை நோக்கி வீசப்படுகிறதோ, அவரை விட, அந்தச் சொற்களைப் பேசுபவரின் தரத்தைத்தான் பிரதிபலிக்கும் என காட்டமாக பதிலளித்திருந்தார்.

 மைக்கைப் பிடித்துப் பேசுவதால் ஒருவர் சொல்லும் கருத்து அறிவார்ந்ததாகவோ அல்லது நகைச்சுவையானதாகவோ மாறிவிடாது என்றும் அது ஒரு முட்டாள்தனமான கருத்து என்றும் சாடியுள்ளார். ஒரு தனிநபரின் வேண்டுகோளுக்கிணங்க தனது பெயரும் புகைப்படமும் அந்த நிகழ்வில் சேர்க்கப்பட்டது என்பதை அறிந்துகொண்டதாகவும் த்ரிஷா குறிப்பிட்டிருந்தார்.

 நடிகை த்ரிஷா குறித்த தனது கருத்துக்கு நடிகரும் இயக்குநருமான பார்த்திபன் வருத்தம் தெரிவித்து 'எது நடந்ததோ அது தவறாகவே நடந்துள்ளது என்றும் இதில் வருந்துவதைத் தவிர வேறு வழியில்லை' என்றும் குறிப்பிட்டிருந்தார்.

 இந்த நிலையில் புதிய வீடியோ பதிவை வெளியிட்டுள்ள நடிகர் பார்த்திபன், "த்ரிஷாவை நான் பாராட்ட வேண்டும் என்று நினைத்தேன் இந்த நேரத்தில். த்ரிஷாவுக்கு எனது வாழ்த்துக்களும் பாராட்டுகளும்" என்று வீடியோவில் பேசியுள்ள அவர், அதே பதிவில், "கோடிட்ட இடங்களை நீங்கள் நிரப்புவதற்குள்... விடியலாக முழு வீடியோவே வரும்!" என்று கூறியிருக்கிறார். சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக த்ரிஷா பற்றி அவர் பேசியுள்ள வீடியோ விரைவில் வெளியாகும் எனத் தெரிகிறது.

விவசாயி வெட்டிப் படுகொலை... இரவு நேரத்தில் வெறிச்செயலில் ஈடுபட்ட மர்ம நபர்கள்... முன்விரோதமா...?

விவசாயி வெட்டி படுகொலை... வெறிச்செயலில் ஈடுபட்ட மர்ம நபர்கள் யார்?

  • தென்காசி மாவட்டம் கரிவலம்வந்தநல்லூரில் விவசாயி ஆறுமுகவேல் இரவு நேரத்தில் கொலை

  • முன்விரோதம், குடும்பத் தகராறு உள்ளிட்ட கோணங்களில் போலீசார் விசாரணை

  • உயிரிழந்தவரின் குடும்பம் போலீசாரிடம் புகார் அளித்தும் நடவடிக்கை இல்லை என புகார்

தாக்கக் குறும்படங்கள்

Read Entire Article