'தாய் கிழவி' படம் செய்த வசூல் சாதனை... 10 நாட்களில் இவ்வளவா?

19 hours ago 20

Last Updated:Mar 09, 2026 8:53 PM IST

வெளியான 10 நாட்களில் தாய் கிழவி படம் வசூலில் சாதனை படைத்தது என அறிவிக்கப்பட்டுள்ளது. அந்தப் படம் செய்த வசூல் என்ன?.

News18
News18

வெளியான 10 நாட்களில் தாய் கிழவி படம் வசூலில் சாதனை படைத்தது என அறிவிக்கப்பட்டுள்ளது. அந்தப் படம் செய்த வசூல் என்ன?.

அறிமுக இயக்குநர் சிவக்குமார் முருகேசன் இயக்கத்தில் நடிகை ராதிகா சரத்குமார் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்த தாய் கிழவி திரைப்படம் கடந்த பிப்ரவரி 27 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது.

சிங்கம் புலி, அருள்தாஸ், பாலசரவணன், முனீஷ் காந்த் உள்ளிட்ட நட்சத்திர பட்டாளமே நடித்து வெளியான தாய் கிழவி படம் மண் வாசனை மணக்க கிராமத்து பாட்டிகளின் நினைவுகளையும், சேமிப்பின் அவசியத்தையும் கண் முன் காட்டிச் சென்றது.

படம் வெளியாகி 10 நாட்களை கடந்தும் திரையரங்குகளில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்நிலையில், வெளியான 10 நாட்களில் 50 கோடி ரூபாய் வசூலித்ததாக படத்தை தயாரித்த சிவகார்த்திகேயனின் எஸ்கே புரொடக்‌ஷன்ஸ் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

Location :

Chennai [Madras],Chennai,Tamil Nadu

Read Entire Article