பலர் டயட் மற்றும் உடற்பயிற்சி செய்தும் எடை குறையாமல் சிரமப்படுகிறார்கள். இதற்கு பொதுவான தவறுகளே இதற்கு காரணமாக இருக்கலாம். இந்த தவறுகளை தவிர்த்து, சமநிலையான வாழ்க்கை முறையை பின்பற்றுவதன் மூலம் எடை குறைப்பில் வெற்றி பெறலாம்.
2 Min read
Published : Mar 09 2026, 06:08 PM IST
16

Image Credit : Gemini AI
எடை குறையாமல் இருப்பதற்கு காரணங்கள்
இன்றைய வேகமான வாழ்க்கை முறையில் உடல் எடை அதிகரிப்பு என்பது பலருக்கும் பொதுவான பிரச்சனையாக மாறியுள்ளது. எனவே உடல் எடையை குறைக்க பலர் டயட் முறைகளை பின்பற்றுவதோடு ஜிம் சென்று கடுமையாக உடற்பயிற்சியும் செய்கிறார்கள். இருந்தாலும், எதிர்பார்த்தபடி எடை குறையாமல் போவது பலரையும் மனதளவில், உடலளவில் பாதிக்க செய்கிறது. உண்மையில், எடை குறைப்பு என்பது டயட் மற்றும் உடற்பயிற்சி மட்டுமல்ல. தினசரி வாழ்க்கை முறைகளும் அதில் முக்கிய பங்கு வகிக்கின்றன.
26
Image Credit : Getty
எடை குறைக்கும் போது கவனிக்க வேண்டியது
சில சமயங்களில் சரியான தகவல் இல்லாமை, தவறான உணவு பழக்கம், போதிய தூக்கமின்மை போன்ற காரணங்கள் எடை குறைக்கும் முயற்சியை பாதிக்கலாம். பலர் அறியாமலேயே சில தவறுகளை செய்து விடுகிறார்கள். இந்தச் சிறிய தவறுகள் கூட எடை குறையும் செயல்முறையை மெதுவாக்கி, முயற்சியின் பலனை குறைக்கலாம். அதனால், எடை குறைக்க முயற்சிக்கும் போது இந்த விஷயங்களை கவனத்தில் கொள்வது மிகவும் முக்கியம்.
36
Image Credit : Getty
குறைவான உணவை சாப்பிடுவது
முதலில், பலர் எடை குறைக்க வேண்டும் என்பதால் மிகவும் குறைவாகவே உணவு சாப்பிடத் தொடங்கிவிடுகிறார்கள். உணவு அளவை அதிகமாக குறைத்தால் உடலுக்கு தேவையான ஊட்டச்சத்துக்கள் கிடைக்காமல் போகும். இதனால் உடலின் மெட்டாபாலிசம் வேகம் குறைந்து, எடை குறைப்பு செயல்முறை மந்தமாகிவிடும். எனவே, உடலுக்கு தேவையான சத்துக்கள் உள்ள சமநிலையான உணவை எடுத்துக்கொள்வது அவசியம்.
46
Image Credit : Getty
சரியான உணவு பழக்கம் இல்லாதது
அடுத்ததாக, உடற்பயிற்சி மட்டும் செய்தால் எடை குறைந்துவிடும் என்று சிலர் நினைக்கிறார்கள். ஆனால், சரியான உணவு பழக்கம் இல்லாமல் உடற்பயிற்சி செய்தாலும் முழு பலன் கிடைக்காது. ஆரோக்கியமான டயட் மற்றும் தொடர்ந்து செய்யப்படும் உடற்பயிற்சி ஆகிய இரண்டும் சேர்ந்து தான் எடை குறைக்க உதவும்.
56
Image Credit : Getty
போதுமான அளவு புரோட்டீன்
மேலும், உணவில் போதுமான அளவு புரோட்டீன் இல்லாதது ஒரு காரணமாக இருக்கலாம். புரோட்டீன் உடலில் தசை வளர்ச்சிக்கு உதவுவதுடன் மெட்டாபாலிசத்தை மேம்படுத்துகிறது. மேலும் நீண்ட நேரம் பசியை கட்டுப்படுத்தவும் உதவுகிறது. இதனால் அதிகமாக சாப்பிடும் பழக்கம் குறையும். ஆனால், உணவில் புரோட்டீன் குறைவாக இருந்தால் எடை குறைப்பது சிரமமாக இருக்கும்.
66
Image Credit : Storyblocks
எடை குறைக்க முக்கியமான பழக்கங்கள்
இதற்கு மேலாக, மிகவும் குறைந்த கலோரி கொண்ட crash diet முறைகளை சிலர் பின்பற்றுகிறார்கள். ஆரம்பத்தில் இது எடை குறைவதைப் போல தோன்றினாலும், நீண்ட காலத்தில் உடலுக்கு பாதிப்பு ஏற்படுகிறது. மேலும் போதிய தூக்கம் இல்லாததும் எடை அதிகரிக்க காரணமாகிறது. தூக்கமின்மை உடலில் பசியை அதிகரிக்கும் ஹார்மோன்களை தூண்டுவதால், அடிக்கடி சாப்பிடும் பழக்கம் உருவாகும். எனவே தினமும் குறைந்தது 7–8 மணி நேரம் தரமான தூக்கம் பெறுவது எடை குறைக்க மிகவும் உதவியாக இருக்கும்.
.png)
22 hours ago
16





English (US) ·