"சித்தாந்தமா? அல்லது அதிகாரமா?" என்ற தர்மசங்கடத்தில் விஜய் இருந்தாலும், விவாகரத்து விவகாரத்தில் திமுக கொடுத்த நெருக்கடி அவரை பாஜக பக்கம் தள்ளியுள்ளது.
14

Image Credit : Asianet News
ஸ்டாலின் போட்ட பர்சனல் ஸ்கெட்ச்?
தமிழக அரசியல் வரலாற்றில் இதுவரை கண்டிராத ஒரு மெகா டீல் டெல்லியில் தயாராகிவிட்டது. ஜனநாயகன் படப்பிரச்சினை, சிபிஐ விசாரணை, விவாகரத்து நோட்டீஸ், நிதி நெருக்கடி என நடிகர் விஜய்யைச் சுற்றி திமுக பின்னியுள்ள வலையை அறுக்க, அமித் ஷா வீசியுள்ள இரண்டரை வருடம் முதலமைச்சர் என்ற அஸ்திரம் தமிழக அரசியலையே உலுக்கத் தொடங்கியுள்ளது.
தேர்தல் நேரத்தில் விஜய் நிலைகுலைய வேண்டும் என்பதற்காக, அவரது மனைவி சங்கீதா நீதிமன்றம் சென்றதன் பின்னணியில் திமுக-வின் 'நிழல்' வேலைகள் இருப்பதாக விஜய் தரப்பு கொதித்துப் போயுள்ளது. தனது தனிப்பட்ட வாழ்க்கையில் கைவைத்த திமுகவை வீழ்த்தியாக வேண்டும் என்ற ஆக்ரோஷத்தில் விஜய் இருக்கும்போதுதான், அமித் ஷா டீம் சரியான நேரத்தில் காய்களை நகர்த்தியுள்ளது.
காங்கிரஸ் கூட்டணிக்கு வரும் என ஆரம்பத்தில் ராகுல் காந்தியை நம்பி ஏமாந்த விஜய்க்கு, இப்போது ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண் மூலம் 'பவர்ஃபுல்' தூது வந்துள்ளது. "இரண்டரை வருடம் விஜய் முதல்வர்... இரண்டரை வருடம் எடப்பாடி முதல்வர்!" இந்த அதிரடி ஆஃபரைக் கேட்டு ஷாக் ஆன விஜய், தற்போது தனது நெருங்கிய வட்டாரத்தில், "இது ஒரு பொன்னான வாய்ப்பு, இதைவிட்டால் பிழைக்க முடியாது" என்ற ரீதியில் விவாதிக்கத் தொடங்கியுள்ளார்.
24
Image Credit : Asianet News
எடப்பாடிக்கு அமித் ஷா 'கறார்' உத்தரவு
இந்த டீலை எடப்பாடி பழனிசாமி முதலில் தயக்கத்துடன் மறுத்துள்ளார். "நமக்குத் தனித்துப் போட்டியிடவே பலம் இருக்கிறது" என அவர் சொல்ல, அமித் ஷாவோ மிகக் கறாராக, "விஜய் உள்ளே வந்தால் இது ஸ்வீப் வின்னிங். மற்றதை நான் பார்த்துக்கொள்கிறேன். நீங்கள் யோசித்துச் சொல்லுங்கள்" என அழுத்தமாகச் சொல்லிவிட்டார். இதனால் வேறு வழியின்றி, எடப்பாடி இப்போது தனது குடும்பத்தினருடன் பதவிப் பங்கீடு குறித்து தீவிர ஆலோசனையில் இறங்கியுள்ளார்.
34
Image Credit : Asianet News
நிதி நெருக்கடியும்... கட்சியின் எதிர்காலமும்!
விஜய்யைப் பொறுத்தவரை அவருக்கு தற்போது இரண்டு பெரிய தலைவலிகள் உள்ளன, தேர்தலைச் சந்திக்கத் தேவையான பிரம்மாண்ட நிதி ஆதாரம். கூட்டணி இல்லாமல் தனித்துப் போட்டியிட்டால் டெபாசிட் காலியாகிவிடுமோ என்ற தொண்டர்களின் பயம். இந்தச் சூழலில், முதலமைச்சர் பதவி என்ற ஆஃபர் விஜய்க்கு ஒரு சஞ்சீவி மூலிகையாகத் தெரிகிறது.
இந்தக் கூட்டணி உறுதியானால், அது திமுக-வுக்கு ஒரு மிகப்பெரிய செக்-மேட்டாக அமையும். விஜய்யின் இளைய தலைமுறை வாக்குகள், எடப்பாடியின் கிராமப்புற வாக்கு வங்கி, பாஜக-வின் டெல்லி அதிகாரம் என மூன்றும் இணைந்தால் அறிவாலயத்தின் திராவிட மாடல் கோட்டை சரிவது உறுதி.
44
Image Credit : Asianet News
கிளைமாக்ஸை நோக்கி அரசியல் போர்
"சித்தாந்தமா? அல்லது அதிகாரமா?" என்ற தர்மசங்கடத்தில் விஜய் இருந்தாலும், விவாகரத்து விவகாரத்தில் திமுக கொடுத்த நெருக்கடி அவரை பாஜக பக்கம் தள்ளியுள்ளது. அமித் ஷாவின் இந்த 2.5 வருடம் சிஎம் டீல், தமிழக அரசியல் வரலாற்றை மாற்றி எழுதப் போகிறதா? அல்லது வெறும் காகிதப் புலியாக முடியுமா? தமிழகம் இதுவரை கண்டிராத ஒரு அரசியல் பூகம்பம் வெடிக்கக் காத்திருக்கிறது.
.png)
21 hours ago
17





English (US) ·