புதுடில்லி, மார்ச் 9 இந்தியாவில் கஞ்சா (Cannabis) அதிகமாக பறிமுதல் செய்யப்படும் இடங்கள் பொதுவாக துறைமுகங்களை விட எல்லை பகுதிகள், ரயில் நிலையங்கள், விமான நிலையங்கள் போன்ற இடங்களில் தான் அதிகம். ஆனால் சில பெரிய கடல் துறைமுகங்களிலும் பெரிய அளவில் போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவங்கள் இருக்கின்றன.
அதிகமாக போதைப்பொருள் (கஞ்சா உட்பட) பறிமுதல் செய்யப் பட்ட துறைமுகங்களில் ஒன்று முத்ரா அதானி துறைமுகம்தான். குஜராத் மாநிலத்தில் உள்ள இந்த துறைமுகத் தில் பல முறை பெரிய அளவிலான போதைப்பொருள் பறிமுதல் செய்யப் பட்டுள்ளன.
உதாரணமாக 2021-இல் இங்கு சுமார் 3,000 கிலோ ஹெராயின் பறிமுதல் செய்யப்பட்டது (இந்தியா வில் மிகப் பெரிய போதைப்பொருள் பறிமுதல் சம்பவங்களில் ஒன்று).
இது காரணமாக இந்தியாவில் போதைப்பொருள் கடத்தல் விவாதங் களில் இந்த துறைமுகம் அடிக்கடி பேசப்படுகிறது.
சமீபத்திய கஞ்சா பறிமுதல் (2026 அருகில்) இந்திராகாந்தி பாலம் விமான நிலையம் டில்லி 19 பிப்ரவரி 2026 – 10.724 கிலோ கஞ்சா கைப்பற்றப் பட்டது. சந்தை மதிப்பு: ரூ.10 கோடி மேல். இரண்டு பயணிகள் கைது செய்யப்பட்டனர்.
இன்னொரு அண்மைச் சம்பவம்: கம்பேகவுடா பன்னாட்டு விமானநிலையம் பெங்களுரு மார்ச் 2026 ஆரம்பம் இரண்டு நாட்களில் சேர்த்து சுமார் 1.87 கிலோ ஹைட்ரோபோனிக் கஞ்சா பறிமுதல். மதிப்பு: ரூ.65 லட்சம்.
முக்கிய உண்மை
இந்தியாவில் கஞ்சா பெரும்பாலும் ஒடிசா –- ஆந்திரா எல்லைப்பகுதியில் உற்பத்தியாகிறது.
அங்கிருந்து ரயில், சரக்கு வாகனம் சிறிய வாகனங்கள் மூலம் தமிழ்நாடு, கேரளம், கருநாடகா போன்ற மாநிலங்களுக்கு கடத்தப்படும்போது கஞ்சா அதிகம் பறிமுதல் செய்யப்படுவது ஆந்திரா–, ஒடிசா எல்லை ரயில் நிலையங்கள் விமான நிலையங்கள் மாநில எல்லை சோதனைச்சாவடிகளில்தான்.
உண்மை இவ்வாறு இருக்க கஞ்சா கலாச்சாரம் தமிழ்நாட்டில்தான் அதிகரித்திருப்பதாக அரசியல்வாதிகள் உளறி வருகின்றனர்.
திருத்தம்
7.3.2026 அன்றைய ‘விடுதலை’ ஏட்டின் இரண்டாம் பக்கத்தில் வெளிவந்த ‘வாழ்வியல் சிந்தனைகள்’ கட்டுரையில் ‘முழு மூதறிஞர்’ என்பதற்கு பதில் ‘முழு முதிர்ச்சியாளர்’ என்று திருத்தி வாசிக்க வேண்டுகிறோம்.
தவறுக்கு வருந்துகின்றோம்.
(ஆ–ர்)
.png)
20 hours ago
16





English (US) ·