AI Caricature வைரலாகும் AI Caricature ட்ரெண்ட் உங்கள் தனிப்பட்ட தரவுகளை திருடலாம்! சைபர் மோசடிகளில் இருந்து தப்பிப்பது எப்படி என முழுமையாகத் தெரிந்துகொள்ளுங்கள்.
16

Image Credit : Gemini
AI Caricature வைரலாகும் 'AI Caricature' ட்ரெண்ட்: உங்கள் கேலிச்சித்திரம் சைபர் மோசடிக்கு வழிகோலுமா?
சமீப நாட்களாக இன்ஸ்டாகிராம், லிங்க்ட்இன் (LinkedIn) மற்றும் எக்ஸ் (X) போன்ற சமூக வலைத்தளங்களில் 'AI Caricature' எனப்படும் கேலிச்சித்திரங்கள் வரையும் ட்ரெண்ட் பெருமளவில் வைரலாகி வருகிறது. பார்ப்பதற்கு வேடிக்கையாகவும், உங்களைப்பற்றி நீங்களே பெருமைப்பட்டுக் கொள்ளும் வகையிலும் இருக்கும் இந்த ட்ரெண்டின் பின்னணியில், மிகப்பெரிய சைபர் பாதுகாப்பு அச்சுறுத்தல் இருப்பதாக நிபுணர்கள் தற்போது எச்சரித்துள்ளனர்.
26
Image Credit : ChatGpt
AI கேலிச்சித்திரம் (AI Caricature) என்றால் என்ன?
இந்த ட்ரெண்டில், பயனர்கள் தங்களது புகைப்படத்தை AI (செயற்கை நுண்ணறிவு) தளங்களில் பதிவேற்றி, 'என்னைப் பற்றி உங்களுக்குத் தெரிந்த அனைத்தையும் வைத்து ஒரு கேலிச்சித்திரம் உருவாக்குங்கள்' (Everything you know about me) என கட்டளையிடுகின்றனர். இதற்காகத் தங்களின் தொழில், விருப்பங்கள் மற்றும் அன்றாட வாழ்க்கை முறை ஆகிய தகவல்களையும் சேர்த்து அளிக்கின்றனர்.
இதனைத் தொடர்ந்து, அந்த நபரின் வேலை, வாழ்க்கை முறை, பொழுதுபோக்குகள் போன்றவற்றை மையப்படுத்தி AI ஒரு பிரத்யேகமான கார்ட்டூன் படத்தை உருவாக்குகிறது. இந்த புகைப்படங்கள்தான் இப்போது இணையத்தை ஆக்கிரமித்துள்ளன.
36
Image Credit : ChatGPT
சைபர் நிபுணர்கள் விடுக்கும் எச்சரிக்கை என்ன?
விளையாட்டாகத் தொடங்கும் இந்த விஷயத்தில், பயனர்கள் தங்களை அறியாமலேயே தங்களின் அதிமுக்கிய தனிப்பட்ட தகவல்களை AI தளங்களுக்கு வழங்குகிறார்கள் என்பதுதான் சைபர் பாதுகாப்பு ஆய்வாளர்களின் பிரதான கவலையாக உள்ளது. ஒரு நபரின் வேலை, பணிபுரியும் இடம், அன்றாட செயல்பாடுகள் போன்ற தகவல்கள் ஆன்லைனில் பகிரப்படும்போது, அவை சைபர் குற்றவாளிகளுக்கு மிக எளிதாகக் கிடைத்துவிடுகின்றன.
இந்தத் தகவல்களைக் கொண்டு, மோசடி கும்பல் உங்களைப் பற்றிய ஒரு முழுமையான டேட்டாபேஸை (Database) உருவாக்க முடியும். இதன் மூலம், உங்கள் நண்பர்கள் அல்லது சக ஊழியர்கள் போல் நடித்து, உங்களை நம்பவைத்து ஏமாற்றும் 'ஃபிஷிங்' (Targeted Phishing) தாக்குதல்களை அவர்கள் எளிதாக அரங்கேற்ற முடியும்.
46
Image Credit : Google
புகைப்படங்கள் மூலம் கசிந்திடும் ரகசியங்கள்
தகவல்கள் மட்டுமின்றி, பயனர்கள் பதிவேற்றும் புகைப்படங்கள் மூலமாகவும் ஆபத்துகள் காத்திருக்கின்றன. பல நேரங்களில், பயனர்கள் பதிவேற்றும் படங்களில் அலுவலகத்தின் லொகேஷன், கழுத்தில் தொங்கும் அடையாள அட்டைகள் (ID Cards) அல்லது பின்புலத்தில் உள்ள முக்கிய விவரங்கள் பதிவாகியிருக்கலாம். இது குற்றவாளிகள் உங்களைப் பின்தொடரவும், மிரட்டவும் வழிவகுத்துவிடும்.
56
Image Credit : Google
எப்படிப் பாதுகாப்பாக இருப்பது?
AI தளங்களைப் பயன்படுத்தும்போது அளவுக்கு அதிகமான தனிப்பட்ட தகவல்களை வழங்குவதை முற்றிலும் தவிர்க்க வேண்டும் என்று பாதுகாப்பு நிபுணர்கள் அறிவுறுத்துகின்றனர். எந்தவொரு AI செயலியிலோ அல்லது இணையதளத்திலோ உங்கள் புகைப்படங்களைப் பதிவேற்றுவதற்கு முன்பாக, அவர்களின் தனியுரிமைக் கொள்கைகளை (Privacy Policies) கட்டாயம் படித்துப் பார்க்க வேண்டும்.
66
Image Credit : X
எது வைரலாகிறதோ?
எது வைரலாகிறதோ அதை நாமும் செய்து பார்க்க வேண்டும் என்ற ஆர்வம் இயல்பானதுதான். ஆனால், அதற்காகக் கண்மூடித்தனமாக எந்தவொரு ட்ரெண்டிலும் பங்கேற்று உங்கள் பாதுகாப்பைக் கேள்விக்குறியாக்கிக் கொள்ளாதீர்கள்!
ஸ்மார்ட்போன்கள் மற்றும் AI முதல் சைபர் பாதுகாப்பு, அறிவியல் முன்னேற்றங்கள் வரை — சமீபத்திய தொழில்நுட்ப (Technology News in Tamil) அப்டேட்களை தொடர்ச்சியாக பெறுங்கள். டிஜிட்டல் டிரெண்ட்ஸ் குறித்து நிபுணர்களின் கருத்துகள், விரிவான தகவல்கள் மற்றும் பிரேக்கிங் நியூஸை வழங்கும் ஒரே தளம் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸ்.புதிய கேஜெட் ரிலீஸ் ஆனதா? புதிய ஸ்டார்ட்அப்புகள் வந்தவையா? எதிர்காலத்தை மாற்றக்கூடிய எந்த டெக் பாலிஸி வந்துள்ளது? இவை அனைத்திற்கும் சிறு சிறு தகவல்கள் இங்கு கிடைக்கும். டெக் விளக்கக் குறிப்புகள் மற்றும் கேஜெட் டெமோ வீடியோக்களையும் நீங்கள் பார்க்கலாம்.
.png)
17 hours ago
12





English (US) ·