ஆக்கிரமிப்புகளை அகற்றக் கோரிய வழக்கு; சென்னை மாநகராட்சி அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு

18 hours ago 12

Last Updated:Mar 09, 2026 9:37 PM IST

சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட 15 மண்டலங்களில், 150 இடங்கள் சாலையோர வியாபாரம் செய்ய அனுமதிக்கப்பட்ட பகுதிகள் எனவும், 188 இடங்கள் வியாபாரம் செய்ய தடைசெய்யப்பட்ட பகுதிகளாகவும் அறிவிக்கப்பட்டுள்ளன.

சென்னை மாநகராட்சி - உயர்நீதிமன்றம்
சென்னை மாநகராட்சி - உயர்நீதிமன்றம்

சென்னை மாநகரில் வியாபாரம் செய்ய தடைசெய்யப்பட்ட 188 இடங்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றக்கோரிய வழக்கில், அறிக்கை தாக்கல் செய்யும்படி, மாநகராட்சிக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட 15 மண்டலங்களில், 150 இடங்கள் சாலையோர வியாபாரம் செய்ய அனுமதிக்கப்பட்ட பகுதிகள் எனவும், 188 இடங்கள் வியாபாரம் செய்ய தடைசெய்யப்பட்ட பகுதிகளாகவும் அறிவிக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில், வியாபாரம் செய்ய தடைவிதிக்கப்பட்ட 188 இடங்களை சாலையோர வியாபாரிகள் ஆக்கிரமித்துள்ளதாகவும், இந்த ஆக்கிரமிப்புகளை அகற்ற உத்தரவிடக் கோரியும், சென்னை கொரட்டூரைச் சேர்ந்த வழக்கறிஞர் என்.ருக்மாங்கதன் வழக்கு தாக்கல் செய்திருந்தார்.

Read Entire Article