2021 தேர்தலுக்கு முன்பு 'உங்கள் தொகுதியில் ஸ்டாலின்' என்ற பெயரில் ஊர் ஊராகச் சென்று பெட்டி வைத்து மனுக்களை வாங்கியவர், இன்று ஆட்சியில் அமர்ந்தவுடன் அதே மக்களின் மனுக்களைப் பெறக்கூட மனமில்லாமல் இருப்பது ஏன்?
14

Image Credit : Asianet News
அறிவாலய வாசலில் அலறவிட்ட காவல்துறை
கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் மற்றும் சூளகிரி பகுதிகளில் தொழில்பேட்டை உள்ளிட்ட அரசுத் திட்டங்களுக்காக விவசாய விளைநிலங்களைக் கையகப்படுத்தும் அரசின் நடவடிக்கைக்கு எதிராக, தமிழக அரசியல் களம் தற்போது போர்க்களமாக மாறியுள்ளது. தங்கள் வாழ்வாதாரத்தைக் காக்கக் கோரி, முதலமைச்சர் ஸ்டாலினைச் சந்திக்க வந்த விவசாயிகளைத் திமுக அரசின் காவல்துறை கைது செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சுமார் 100-க்கும் மேற்பட்ட விவசாயிகள், தங்கள் நிலங்களைக் காக்க வேண்டும் என்ற ஒற்றைக் கோரிக்கையுடன் ஓசூரிலிருந்து சென்னைக்கு வந்துள்ளனர். தங்கள் குறைகளை முதலமைச்சரிடம் மனுவாகக் கொடுக்க வந்த அவர்களை, திமுக தலைமை அலுவலகமான அறிவாலய வாசலிலேயே வைத்து காவல்துறை கைது செய்துள்ளது.
"மக்களாட்சி நடக்கும் ஒரு மாநிலத்தில், பாதிக்கப்பட்ட விவசாயிகள் முதலமைச்சரைச் சந்திக்கக் கூட அனுமதி இல்லையா?" என்ற கேள்வி இப்போது சமூக வலைதளங்களில் காட்டுத்தீயாகப் பரவி வருகிறது. ஜனநாயகத்தின் குரல்வளை நெரிக்கப்படுவதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டுகின்றன.
24
Image Credit : X/@arivalayam
எடப்பாடி பழனிசாமியின் அதிரடித் தாக்குதல்
இந்தச் சம்பவத்தைக் கண்டித்து அறிக்கை வெளியிட்டுள்ள அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, முதலமைச்சர் ஸ்டாலினை பொம்மை முதல்வர் என மிகக் காரசாரமாகச் சாடியுள்ளார்.
2021 தேர்தலுக்கு முன்பு 'உங்கள் தொகுதியில் ஸ்டாலின்' என்ற பெயரில் ஊர் ஊராகச் சென்று பெட்டி வைத்து மனுக்களை வாங்கியவர், இன்று ஆட்சியில் அமர்ந்தவுடன் அதே மக்களின் மனுக்களைப் பெறக்கூட மனமில்லாமல் இருப்பது ஏன்? என எடப்பாடி கேள்வி எழுப்பியுள்ளார்.
விவசாயிகளின் மனுவைக் கூடப் பெறத் துப்பில்லாத இந்த அரசு, விவசாயிகளுக்கான அரசு அல்ல; இது கார்ப்பரேட்டுகளுக்கான அரசு என்பதை ஸ்டாலின் தனது நடவடிக்கையாலேயே தோலுரித்துக் காட்டிவிட்டார் என்று இபிஎஸ் விமர்சித்துள்ளார்.
34
Image Credit : Asianet News
விளைநிலங்கள் பறிபோகும் அபாயம்
ஓசூர் மற்றும் சூளகிரி வட்டாரங்களில் சிப்காட் விரிவாக்கம் மற்றும் பிற தொழில் திட்டங்களுக்காக ஆயிரக்கணக்கான ஏக்கர் செழிப்பான விவசாய நிலங்களைக் கையகப்படுத்த அரசு முயன்று வருகிறது. இது அந்தப் பகுதி விவசாயிகளின் வாழ்வாதாரத்தை அடியோடு சிதைக்கும் செயல் எனப் போராட்டங்கள் வெடித்துள்ளன.
"தொழில் வளர்ச்சி அவசியம் தான், ஆனால் அது விவசாயிகளின் கண்ணீரிலும், விளைநிலங்களின் பிணத்தின் மீதும் அமையக் கூடாது" என்பதே விவசாயிகளின் வாதம். ஆனால், பேச்சுவார்த்தைக்கு அழைப்பதற்குப் பதிலாகக் கைது நடவடிக்கையில் இறங்கியிருப்பது 'திராவிட மாடல்' அரசுக்குக் கரும்புள்ளியாக மாறியுள்ளது.
44
Image Credit : our own
விவசாயிகளின் கோபம்
கைது செய்யப்பட்ட விவசாயிகளை உடனடியாக விடுதலை செய்து, அவர்களுக்கு உரிய மரியாதை அளித்து, அவர்களின் மனுக்களை முதலமைச்சர் நேரில் பெற வேண்டும் என எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.
இந்தச் சம்பவம், வரும் 2026 சட்டமன்றத் தேர்தலில் ஒரு முக்கியப் பாதிப்பை ஏற்படுத்தும் எனக் கருதப்படுகிறது. "மனு வாங்கக்கூட நேரமில்லாத முதல்வர்" என்ற பிம்பம் மக்கள் மத்தியில் உருவானால், அது திமுக-வுக்குப் பெரும் பின்னடைவைத் தரும். விவசாயிகளின் நிலத்தைப் பறிக்கும் திட்டங்களைக் கைவிடாவிட்டால், விளைநிலங்கள் போராட்டக் களமாக மாறுவதை யாராலும் தடுக்க முடியாது.
.png)
23 hours ago
16





English (US) ·