Madurai Weather: மதுரையை வாட்டும் வெயில்… இந்த வாரம் வானிலை எப்படி இருக்கும்.? - முழு விவரம் இதோ...

1 hour ago 14

Last Updated:Mar 10, 2026 2:26 PM IST

மதுரை மாவட்டத்தில் அதிகபட்ச வெப்பநிலை 30 டிகிரி செல்சியஸிலிருந்து 36 டிகிரி செல்சியஸ் வரை பதிவாகும் என கணிக்கப்பட்டுள்ளது.

+

மதுரை

மதுரை வானிலை விவரம்

தென் தமிழக பகுதிகளிலிருந்து கடலோர கர்நாடகா வரை வளிமண்டலத்தின் கீழடுக்கு பகுதியில் சுழற்சி நிலவி வருவதால், தமிழகத்தின் சில பகுதிகளில் வானிலையில் மாற்றம் ஏற்படக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதன் காரணமாக தமிழக கடலோர மாவட்டங்களில் சில இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இன்றும் நாளையும் லேசான மழை பெய்யும் வாய்ப்பு உள்ளதாக கூறப்பட்டுள்ளது. மேலும் தென் தமிழக கடலோர மாவட்டங்களில் வரும் 11 மற்றும் 12ம் தேதிகளில் ஓரிரு இடங்களில் சிறிய அளவில் மழை பதிவாகக்கூடும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதற்கிடையில், மதுரை மாவட்டத்தில் இந்த வாரம் முழுவதும் வெயிலின் தாக்கம் சற்று அதிகமாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மாவட்டத்தில் அதிகபட்ச வெப்பநிலை 30 டிகிரி செல்சியஸிலிருந்து 36 டிகிரி செல்சியஸ் வரை பதிவாகும் என கணிக்கப்பட்டுள்ளது.

ஆனால் வருகின்ற 11 மற்றும் 12ம் தேதிகளில் வெயிலின் தாக்கம் சற்றே குறைந்து, அதிகபட்ச வெப்பநிலை 28 முதல் 30 டிகிரி செல்சியஸ் வரை இருக்கும் வாய்ப்பு உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து அடுத்தடுத்த நாட்களில் மீண்டும் வெயிலின் தாக்கம் படிப்படியாக அதிகரிக்கக்கூடும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

தமிழ் செய்திகள்/மதுரை/

Madurai Weather: மதுரையை வாட்டும் வெயில்… இந்த வாரம் வானிலை எப்படி இருக்கும்.? - முழு விவரம் இதோ...

Read Entire Article