Last Updated:Mar 09, 2026 9:11 PM IST
இதனால் மேலும் பல பார்சி குடும்பங்கள் இப்பகுதியில் குடியேறினாலும், வழிபாட்டுக்கான ஆலயம் இல்லாதது சமூகத்தில் குறையாக இருந்தது.

சென்னை ராயபுரத்தில் அமைந்துள்ள பார்சி சமூகத்தின் நெருப்புக் கோயில், நகரத்தின் பன்முக கலாசார மரபை நினைவூட்டும் முக்கிய அடையாளமாக உள்ளது. ஒளியையும் நெருப்பையும் தெய்வீகத்தின் சின்னமாகக் கருதி வணங்கும் பார்சி மக்கள், உலகின் எந்த நாட்டில் வாழ்ந்தாலும் தங்கள் பாரம்பரிய வழக்கங்களை காத்து வரும் சமூகமாக அறியப்படுகிறார்கள்.
அவர்களின் பழமையான இறுதிச்சடங்கு முறையில், மரணமடைந்தவர்களின் உடலை இயற்கைக்கு ஒப்படைத்து கழுகுகளுக்கு இரையாக்கும் மரபும் இடம்பெறுகிறது. ஆனால் கழுகுகளின் எண்ணிக்கை குறைந்ததால் இந்த நடைமுறையில் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன.
சென்னையில் பார்சி சமூகத்தின் வருகை 18-ஆம் நூற்றாண்டின் இறுதியில் தொடங்கியது. 1795 ஆம் ஆண்டு வடஇந்தியாவில் இருந்து சில குடும்பங்கள் ராயபுரத்தில் குடியேறி சிறிய சமூகமாக வாழத் தொடங்கினர். வணிகத் துறையில் கடின உழைப்பால் அவர்கள் தங்களை நிலைநிறுத்திக் கொண்டனர்.
1896 ஆம் ஆண்டு பூனாவைச் சேர்ந்த வணிகர் சர் தின்ஷா பெட்டிட் 3,600 ரூபாய் நன்கொடை வழங்கினார். சமூகத் தலைவர் சொராப்ஜி பிராம்ஜியும் 1,000 ரூபாய் அளித்தார். பின்னர் 1906 இல் தனது மகனை இழந்த பிரோஜ் கிளப்வாலா, கோயில் கட்டுமானத்தை தாமாக ஏற்று வேகப்படுத்தி, பூசாரி நியமிக்க 2,000 ரூபாய் வழங்கினார்.
இதன் விளைவாக 1910 ஆம் ஆண்டு “ஜல் பிரோஜ் கிளப்வாலா தர்-இ-மெகர்” என்ற நெருப்புக் கோயில் உருவானது. அப்போது ஏற்றப்பட்ட புனித நெருப்பு இன்று வரை அணையாமல் எரிகிறது. எம்டன் கப்பல் தாக்குதலின்போதும் பூசாரி பெஷோதான் அந்த ஜோதியை பாதுகாத்ததாக கூறப்படுகிறது. இந்தியாவில் பல நெருப்புக் கோயில்கள் இருந்தாலும், தமிழ்நாட்டில் இயங்கும் ஒரே பார்சி நெருப்புக் கோயில் ராயபுரத்தில் உள்ள இதுவே.

ஏ.சி.க்களின் விலையை 5 முதல் 15 சதவீதம் வரை உயர்த்திய நிறுவனங்கள்...!
மூலப்பொருட்கள் விலை உயர்வு, ரூபாய் மதிப்பு வீழ்ச்சியால் ஏசி விலை 15% உயர்வு
மத்திய அரசின் புதிய தரக்கட்டுப்பாடுகள், அந்நியச் செலாவணி மாற்றங்களே காரணம்
வோல்டாஸ், எல்ஜி, டைகின் உள்ளிட்ட முன்னணி நிறுவனங்கள் விலை உயர்வை அறிவித்துள்ளன
.png)





English (US) ·