மெரினாவில் நிறுத்தப்பட்ட 'வாக்குச்சாவடி பேருந்து' - ஒரு விசிட் அடிப்போமா.?

1 hour ago 17

Last Updated:Apr 17, 2026 5:36 PM IST

இந்தப் பேருந்தின் மிக முக்கியமான அம்சம், தேர்தல் நாளன்று ஒரு வாக்குச்சாவடியில் அலுவலர்கள் எங்கு அமர்ந்திருப்பார்கள் என்பதைக் காட்சிப்படுத்தியதுதான். பேருந்தின் உட்புறத்தில் ஒவ்வொரு அலுவலருக்கும் தனித்தனியாக இடங்கள் ஒதுக்கப்பட்டிருந்தன.

+

தேர்தல்

தேர்தல் விழிப்புணர்வு பேருந்து

2026 தமிழ்நாடு சட்டமன்ற பொதுத் தேர்தலை முன்னிட்டு, தமிழகம் முழுவதும் தேர்தல் விழிப்புணர்வுப் பணிகள் மிகத் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. குறிப்பாக, சென்னை மாவட்டத்தில் 100 சதவீதம் வாக்குப்பதிவை இலக்காகக் கொண்டு, "தேர்தல் திருவிழா - தமிழ்நாட்டின் பெருவிழா" எனும் முழக்கத்துடன் பல்வேறு முன்னெடுப்புகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதன் ஒரு சிறப்பம்சமாக, சென்னை மெரினா கடற்கரையில் நிறுத்தப்பட்டிருந்த மாதிரி வாக்குச்சாவடி பேருந்து, மக்களின் கவனத்தை ஈர்க்கும் ஒரு முக்கிய மையப்புள்ளியாக மாறியது.

பொதுவாக வாக்குச்சாவடி என்பது தேர்தல் நாளன்று மட்டுமே பொதுமக்கள் காணக்கூடிய ஒன்று. ஆனால், முதல்முறை வாக்களிக்கும் இளைஞர்களுக்குள் இருக்கும் தயக்கத்தைப் போக்கவும், வாக்களிக்கும் முறையைத் தத்ரூபமாகக் கற்றுத் தரவும் இந்தப் பேருந்து ஒரு 'நடமாடும் வாக்குச்சாவடியாக' வடிவமைக்கப்பட்டிருந்தது. இந்தப் பேருந்துக்குள் நுழைந்த ஒரு வாக்காளர், ஒரு நிஜமான வாக்குச்சாவடிக்குள் நுழைந்த உணர்வைப் பெறும் வகையில் அதன் உட்புறக் கட்டமைப்பு மிக நேர்த்தியாகச் செய்யப்பட்டிருந்தது.

இந்தப் பேருந்தின் மிக முக்கியமான அம்சம், தேர்தல் நாளன்று ஒரு வாக்குச்சாவடியில் அலுவலர்கள் எங்கு அமர்ந்திருப்பார்கள் என்பதைக் காட்சிப்படுத்தியதுதான். பேருந்தின் உட்புறத்தில் ஒவ்வொரு அலுவலருக்கும் தனித்தனியாக இடங்கள் ஒதுக்கப்பட்டிருந்தன:

வாக்குச்சாவடி அலுவலர் - 1 வாக்குச்சாவடி அலுவலர் - 2: வாக்குச்சாவடி அலுவலர் வாக்குச்சாவடி தலைமை அலுவலர்: இவர்களின் இடங்கள் வரிசையாக அமைக்கப்பட்டிருந்தது, ஒரு வாக்காளர் உள்ளே நுழைந்தது முதல் வெளியேறும் வரை எத்தகைய நடைமுறைகளைப் பின்பற்ற வேண்டும் என்பதை எளிய முறையில் புரிய வைத்தது.

வாக்குப்பதிவு இயந்திரம் குறித்துப் பொதுமக்களிடையே இருக்கும் பல்வேறு சந்தேகங்களுக்கு விடை தரும் வகையில், நவீன மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் (EVM) மற்றும் விவிபேட் (VVPAT) கருவி ஆகியவை இந்தப் பேருந்தில் வைக்கப்பட்டிருந்தன. மெரினா கடற்கரைக்கு மாலை நேரங்களில் வரும் ஆயிரக்கணக்கான இளைஞர்கள் மற்றும் முதல்முறை வாக்காளர்களுக்கு இந்தப் பேருந்து ஒரு சிறந்த வழிகாட்டியாக அமைந்தது. தேர்தல் குறித்த அச்சம் மற்றும் குழப்பங்களைத் தவிர்த்து, தங்களின் முதல் வாக்கைப் பதிவு செய்ய அவர்கள் மிகுந்த ஆர்வத்துடன் இந்தப் பேருந்திற்குள் சென்று செயல்முறை விளக்கங்களைக் கேட்டறிந்தனர்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

Read Entire Article