கிராம நத்தம் பட்டா மாறுதலுக்கு பொதுமக்கள் எப்படி விண்ணப்பிக்க வேன்டும் என நீங்கள் கேட்கலாம்.
* முதலில் தமிழக அரசின் அதிகாரப்பூர்வ இ-சேவை தளம் அல்லது eservices.tn.gov.in என்ற இணையதளத்திற்கு செல்லுங்கள்.
* உங்கள் பயனர் விவரங்களைக் கொண்டு லாகின் செய்யுங்கள். ஏற்கெனவே கணக்கு இல்லையேன்றால் புதிய கணக்கை உருவாக்கலாம்.
* பின்பு மெனுவில் பட்டா மாறுதல் விண்ணப்பம் (Apply for Patta Transfer) என்பதை தேர்வு செய்யவும்.
* இதனைத் தொடர்ந்து மாவட்டம், வட்டம், கிராமம் ஆகியவற்றைத் தேர்வு செய்து, புல எண் (Survey Number) மற்றும் உட்பிரிவு எண்ணைக் குறிப்பிட வேண்டும்.
* இதன்பிறகு கேட்கப்படும் பத்திரம், EC போன்ற ஆவணங்களை ஸ்கேன் செய்து PDF வடிவில் பதிவேற்றவும்.
* தொடர்ந்து பட்டா மாறுதலுக்கான அரசு நிர்ணயித்த கட்டணத்தை ஆன்லைனில் (Net Banking/UPI/Card) செலுத்த வேண்டும்.
* இறுதியாக விண்ணப்பம் சமர்ப்பிக்கப்பட்டதும் ஒரு விண்ணப்ப எண் உருவாக்கப்படும். அதனை வைத்து உங்கள் விண்ணப்பத்தின் நிலையை அவ்வப்போது சரிபார்த்து கொள்ள முடியும்.
என்னென்ன ஆவணங்கள் வேண்டும்?
கிராம நத்தம் பட்டா மாறுதலுக்கு விண்ணப்பிக்க கிரயப் பத்திரம் (Sale Deed) அல்லது தான செட்டில்மென்ட் பத்திரம், வில்லங்கச் சான்றிதழ் (EC - Encumbrance Certificate), ஆதார் அட்டை மற்றும் இதர அடையாளச் சான்றுகள், பழைய வரி ரசீதுகள் ஆகியவை வைத்திருக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.
.png)
1 hour ago
17




English (US) ·