தன்னுடன் நடிக்கும் அனைத்து நடிகர்களும்.. ஆனால்.. நடிகர் கிருஷ்ணா மட்டும் இப்படி.. நடிகை வாணிஸ்ரீ அதிர்ச்சி தகவல்

1 hour ago 16

1960-70களில் முன்னணி நடிகையாக இருந்த வாணிஸ்ரீ, சமீபத்திய பேட்டியில் ஒரு ரகசியத்தை பகிர்ந்துள்ளார். தெலுங்கு சூப்பர் ஸ்டார் கிருஷ்ணா தன்னிடம் குறைவாகவே பேசுவார் என்றும், ஒரு படத்தில் அவருடன் நடிக்க மறுத்த சம்பவத்தையும் கூறியுள்ளார்.

15

Image Credit : our own

தமிழ், தெலுங்கு, கன்னடம் போன்ற மொழிகளில், 1960 மற்றும் 70களில் முன்னணி நடிகையாக இருந்தவர் வாணிஸ்ரீ. வசீகரமான முகம், தனித்துவமான நடிப்பு மற்றும் கம்பீரமான குரல் ஆகியவற்றால் தமிழ், தெலுங்கு மற்றும் கன்னடத் திரையுலகில் ஒரு பொற்காலத்தை உருவாக்கியவர். தமிழில் 1966-ஆம் ஆண்டு வெளியான, நம்ப வீட்டு லட்சுமி எனும் படத்தில் அறிமுகமான வாணிஸ்ரீ, பின்னர் காதல் படுத்தும் பாடு, தங்க தம்பி, காதலித்தால் போதுமா, கன்னி பெண், குழந்தை உள்ளம் போன்ற பல படங்களில் நடித்தார். குறிப்பாக சிவாஜி கணேசனுடன் இவர் நடித்த வசந்த மாளிகை திரைப்படம் புகழின் உச்சிக்கே கொண்டு சென்றது.

25

Image Credit : Asianet News

அந்த காலத்தில் வாணிஸ்ரீ கட்டும் புடவைகள், அவர் அணிந்து கொள்ளும் பெரிய அளவிலான பொட்டுக்கள் மற்றும் அவரது கூந்தல் அலங்காரம் (Hair Style) ஆகியவை பெண்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றன. "வாணிஸ்ரீ பொட்டு" என்பது அக்காலத்தில் மிகப்பிரபலம். தமிழை விட தெலுங்கு படங்களில் அதிக கவனம் செலுத்திய வாணிஸ்ரீ, என்டிஆர், கிருஷ்ணம் ராஜு, ஷோபன் பாபு, என அனைத்து ஹீரோக்களுடனும் நடித்தவர். அதே போல் பாலகிருஷ்ணா, சிரஞ்சீவி, வெங்கடேஷ், நாகர்ஜுனா போன்ற அடுத்த தலைமுறை ஹீரோக்களுக்கு அம்மா, அத்தை போன்ற வேடங்களிலும் நடித்துள்ளார்.

35

Image Credit : our own

இவர் மறைந்த தெலுங்கு சூப்பர் ஸ்டார் கிருஷ்ணா பற்றி அண்மையில் வாணிஸ்ரீ கொடுத்த பேட்டியில்: தன்னுடைய நடிப்பை பார்த்து, தன்னுடன் நடிக்கும் அனைத்து நடிகர்களுடன் பாராட்டி உள்ளனர். ஆனால் கிருஷ்ணா மட்டும் தன்னை பாராட்டியதே இல்லை. அதே போல் அவருக்கு என்னுடன் என்ன பிரச்சனை என தெரியவில்லை. அவர் என்னிடம் மிகவும் குறைவாகவே பேசுவார்.

45

Image Credit : Asianet News

மேலும் ஸ்டார் ஹீரோயினாக நடித்த பிறகு அத்தை, அம்மா போன்ற வேடத்தில் நடிக்க எனக்கு எந்த சிரமமும் ஏற்படவில்லை . பாய்காரு ரீமேக் படம் முதலில் கிருஷ்ணாவிடம் தான் சென்றது. கிருஷ்ணாவின் அம்மாவாக வாணிஸ்ரீ நடித்தால் மட்டுமே தயாரிப்போம் என்று தயாரிப்பாளர்கள் தெரிவித்தனர். எனவே கிருஷ்ணா என்னை அழைத்தார். இந்த படத்தை நீங்கள்தான் செய்ய வேண்டும் என்றார். அந்த கதையில் கிருஷ்ணாவுக்கு மிகவும் நம்பிக்கை இருந்தது.

55

Image Credit : Asianet News

இந்த படத்தில் நடிக்க நான் சம்மதிக்கவில்லை. தமிழில் அந்த படத்தைப் பார்த்தால், க்ளைமாக்ஸில் தந்தை மகனுக்கு விஷம் கொடுக்கும் காட்சிகள் உள்ளன. எனவே இப்படத்தில் நான் நடிக்க முடியாது என அவரிடம் கூறினேன். வாணிஸ்ரீ ஒப்புக்கொள்ளாததால், கிருஷ்ணாவின் கையிலிருந்து படம் வெங்கடேஷுக்கு சென்றது. அம்மா வேடத்தில் ஜெயசித்ரா நடித்தார். சில படங்கள் தனக்கு பிடிக்காவிட்டாலும் நடித்தேன் என கூறியுள்ளார்.

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

Read Entire Article