நில ஆவணங்கள் இனி ஒரே கிளிக்கில் – தமிழ்நாடு அரசின் புதிய ஆன்லைன் சேவை...

2 hours ago 19

Last Updated:Mar 08, 2026 10:12 AM IST

 ‘ஒருங்கிணைந்த நில ஆவணத்தை’ பார்வையிட்டு பதிவிறக்கம் செய்யலாம். இதன் மூலம் நில உரிமை தொடர்பான தகவல்களை டிஜிட்டல் வடிவில் பாதுகாப்பாக பெற முடியும்.

நில ஆவணம் ஆன்லைன்

தமிழகத்தில் நிலம் சொத்து தொடர்பான தகவல்களை பொதுமக்கள் எளிதாக அறிந்து கொள்ளும் வகையில் புதிய இணையவழி சேவைகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறையின் கீழ் செயல்படும் நிலவரித் திட்டத் துறை இந்த டிஜிட்டல் வசதிகளை உருவாக்கியுள்ளது. இதன் மூலம் நில உரிமையாளர்கள் தங்கள் நிலம் தொடர்பான ஆவணங்களை ஒரே தளத்தில் தெளிவாகவும் விரைவாகவும் பெறும் வாய்ப்பு கிடைக்கும்.

நில ஆவணம் ஆன்லைன்

இந்த முயற்சியின் ஒரு பகுதியாக ‘ஒருங்கிணைந்த நில ஆவணம்’ (Integrated Land Record) என்ற சேவை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதில் ‘அ’ பதிவேடு, சிட்டா மற்றும் புலப்படம் போன்ற முக்கிய நில ஆவணங்கள் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளன. இதனால் பல்வேறு இடங்களில் தனித்தனியாக ஆவணங்களை தேட வேண்டிய அவசியம் இல்லாமல், ஒரே இடத்தில் முழுமையான நில விவரங்களை அறிய முடியும்.

நில ஆவணம் ஆன்லைன்

மேலும் பட்டா மாறுதல் விவரங்களின் அறிக்கை’ (History of Patta Transfer) என்ற சேவையும் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு தொடங்கப்பட்டுள்ளது. ஒரு குறிப்பிட்ட புல எண்ணில் கடந்த காலங்களில் நடைபெற்ற பட்டா மாற்றங்கள் குறித்து விரிவான தகவல்களை இந்த சேவையின் மூலம் அறிய முடியும். இந்த வசதிகளை வருவாய்த் துறை அமைச்சர் KKSSR ராமச்சந்திரன் தொடங்கி வைத்தார். 

நில ஆவணம் ஆன்லைன்

பொதுமக்கள் https://eservices.tn.gov.in/eservicesnew/home.html என்ற இணையதளத்தில் தங்களது நில விவரங்களை பதிவு செய்து ‘ஒருங்கிணைந்த நில ஆவணத்தை’ பார்வையிட்டு பதிவிறக்கம் செய்யலாம். இதன் மூலம் நில உரிமை தொடர்பான தகவல்களை டிஜிட்டல் வடிவில் பாதுகாப்பாக பெற முடியும்.

நில ஆவணம் ஆன்லைன்

பட்டா மாறுதல் விவர அறிக்கையை பெற விரும்புபவர்கள் https://tamilnilam.tn.gov.in/citizen பகுதியை தேர்வு செய்து நில விவரங்கள் மற்றும் தேதியை பதிவு செய்ய வேண்டும். இந்த சேவைக்காக ஆண்டு ஒன்றுக்கு ரூ.50 கட்டணமும், ரூ.60 செயலாக்கக் கட்டணமும் இணையம் மூலம் செலுத்த வேண்டும். விண்ணப்பித்த பிறகு முந்தைய பட்டா மாற்றங்களின் முழு விவரங்களையும் கொண்ட அறிக்கையை பதிவிறக்கம் செய்யலாம் என அரசு தெரிவித்துள்ளது.

ஒரே நேரத்தில் 3 காதலிகள்... கென் கருணாஸ் நடிக்கும் 'யூத்' பட டிரைலர்... எப்படியிருக்கு?

ஒரே நேரத்தில் 3 காதலிகள்... கென் கருணாஸ் நடிக்கும் 'யூத்' பட டிரைலர்!

  • கென் கருணாஸ் இயக்கிய 'யூத்' பட டிரைலர் வெளியானது, 3 காதலிகள் மற்றும் பள்ளி மாணவர்களை சுற்றியது

  • ஜிவி பிரகாஷின் இசையுடன், 'யூத்' பட டிரைலர் ரசிகர்களை கவர்ந்தது

  • படம் மார்ச் 19ம் தேதி வெளியிடப்படும்.

தாக்கக் குறும்படங்கள்

Read Entire Article