Last Updated:Mar 07, 2026 5:59 PM IST
TVK Vijay | தனது மனைவி சங்கீதா விவாகரத்து வழக்கு தாக்கல் செய்த நிலையில் தனது சொந்த பிரச்சினைகள் பற்றி தவெக மேடையில் விஜய் பேசியிருக்கிறார். என்ன சொன்னார்?

சென்னை நீலாங்கரையில் உள்ள வீட்டிற்குள் தன்னை அனுமதிக்க விஜய் மறுப்பதாக குற்றம்சாட்டியுள்ள அவரது மனைவி சங்கீதா, விவாகரத்து வழக்கு முடியும் வரை அங்கு தங்குவதற்கு அனுமதிக்க வேண்டும் என்று புதிய மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார்.
நடிகரும், தவெக தலைவருமான விஜய்யிடம் இருந்து விவாகரத்து கோரி அவரது மனைவி சங்கீதா செங்கல்பட்டு குடும்ப நல நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். அதில், நடிகர் விஜய்க்கு நடிகை ஒருவருடன் தொடர்பு இருப்பதாகவும், அவருடன் வெளிநாடுகளுக்கு சென்று வருவதாகவும் குறிப்பிட்டு இருந்தார்.
மேலும், விஜயிடம் இருந்து அழுத்தம் வந்தால், அந்த நடிகை யார் என்ற விவரங்களையும் குறிப்பிட நேரிடும் என்று சங்கீதா தனது மனுவில் சுட்டிக்காட்டி இருந்தார். இதனைத் தொடர்ந்து, சென்னையில் நடைபெற்ற திருமண நிகழ்ச்சி ஒன்றில் நடிகர் விஜய் மற்றும் நடிகை திரிஷா ஒரே நிற பட்டுடையில் ஒன்றாக கலந்து கொண்டனர்.
இந்நிலையில், சென்னை நீலாங்கரையில் உள்ள வீட்டில் தான் தங்குவதற்கு விஜய் அனுமதிக்க மறுப்பதாக கூறி, அவரது மனைவி சங்கீதா செங்கல்பட்டு குடும்ப நல நீதிமன்றத்தில் புதிய மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். அதில், விஜயை திருமணம் செய்து 26 ஆண்டுகள் குடும்பம் நடத்தி, 2 குழந்தைகளை பெற்றெடுத்து வளர்த்திருப்பதாக குறிப்பிட்டுள்ளார். திருமணத்திற்குப் பிறகு விஜயை நன்றாக கவனித்துக் கொண்டதாகக் கூறியுள்ள சங்கீதா, அவரும் குடும்பத்தின் மீது அக்கறையுடன் இருந்ததாக தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், தனது பிரதான மனுவில் குறிப்பிட்ட காரணங்களால், அவரிடம் இருந்து சுமூகமாக பரஸ்பரம் பிரிவதற்கு பல முறை முயற்சித்தும் விஜய் ஒத்துக்கொள்ள மறுத்ததாக குறிப்பிட்டுள்ளார். அதே சமயம், விவாகரத்து வழக்கு தொடர்ந்தால், வீட்டில் தங்குவதற்கு அனுமதி கிடையாது என்று விஜய் தனது வழக்கறிஞர் மூலம் ஏற்கனவே கூறியதாக சங்கீதா தனது மனுவில் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், இங்கிலாந்து குடியுரிமை பெற்ற தனக்கு சென்னையில் வசிப்பதற்கு வேறு வீடு கிடையாது என்றும் விவாகரத்து வழக்கு முடியும் வரை, நீலாங்கரை வீட்டில் தங்குவதற்கு விஜய் அனுமதிக்க வேண்டும் என்று நீதிமன்றம் இடைக்கால உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்று சங்கீதா கோரிக்கை விடுத்துள்ளார்.
இந்த நிலையில் தவெக சார்பில் நடந்த மகளிர் அணி விழாவில் பேசிய விஜய், "சமீபமாக சில பிரச்சினைகளில் ஓடிக்கொண்டிருக்கிறது. அதற்காக நீங்கள் போராடி வேதனை அடைவதை நான் பார்க்கிறேன். அதை பார்த்து எனக்கு வேதனையாக இருக்கிறது. அதெல்லாம் நான் பார்த்துக்கொள்கிறேன். நானும் நீங்களும் சேர்ந்து மக்களுடைய பிரச்சினைகளை பார்ப்போம். அவ்வளவு வேதனை அடையாதீர்கள். கவலைப்படும் அளவுக்கு வொர்த் கிடையாது" என்று பேசினார்.

சிலிண்டர் வைத்திருப்போருக்கு புதிய கட்டுப்பாடு.. வெளியான அறிவிப்பு
கொல்கத்தா, பாட்னாவில் சிலிண்டர் வாங்கிய பிறகு 21 நாட்கள் கழித்து மட்டுமே புக் செய்ய முடியும்
இஸ்ரேல்-ஈரான் போர் காரணமாக இந்தியாவில் எரிவாயு தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உள்ளது
பொதுமக்கள் தேவைக்கு அதிகமாக சிலிண்டர்கள் வாங்க வேண்டாம் என எண்ணெய் நிறுவனங்கள் அறிவுறுத்தின
.png)







English (US) ·