Last Updated:Mar 08, 2026 11:11 AM IST
அயோத்தியில் ராமர் கோயில் அருகே சுமார் 3 ஏக்கர் நிலத்தை பிரபல சூப்பர் ஸ்டார் நடிகர் வாங்கியிருக்கிறார். தொடர்ந்து அயோத்தியில் சொத்துக்களை வாங்கி குவித்து வரும் அந்த நடிகர் யார் தெரியுமா?

அவர் பாலிவுட் பிக் பி என அழைக்கப்படும் அமிதாப் பச்சன் தான். நடிகர் அமிதாப் பச்சன் பாலிவுட்டின் சூப்பர் ஸ்டாராக உலக அளவில் கவனம் ஈர்த்தவர். 90களில் சொந்த படத்தை தயாரித்து அதன் மூலம் ஏற்பட்ட நஷ்டத்தால் பொருளாதார நெருக்கடியில் சிக்கினார்.
கடுமையான நிதி நெருக்கடியால் அவரின் ஜூஹு பங்களா ஏலம் விடப்படும் நிலைக்கு போனது. அப்படியான நெருக்கடியில் இருந்து மூன்றே ஆண்டுகளில் மறுபிரவேசம் செய்தார் அமிதாப் பச்சன். தனது கடின உழைப்பால் இழந்த வீட்டை மீண்டும் வாங்கிய அமிதாப், அதே தெருவில் மேலும் இரண்டு வீடுகளையும் வாங்கினார்.
கடனில் இருந்து மீண்டு வந்தவர், "கோன் பனேகா குரோர்பதி" மற்றும் விளம்பரங்களில் நடித்து சொத்து சேர்த்தார். அதன்படி அவரது சொத்து மதிப்பு ரூ.1600 கோடி என கூறப்படுகிறது. இதன்பின் அவரின் வாழ்க்கையில் நிதி நெருக்கடி என்பதே இல்லை.
தற்போது முதலீடுகளில் கவனம் செலுத்தி வருகிறது பச்சன் குடும்பம். 2024 ஆம் ஆண்டில், பச்சன் குடும்பம் ரியல் எஸ்டேட்டில் ரூ. 100 கோடிக்கு மேல் முதலீடு செய்ததாக செய்திகள் வெளியாகின.
அயோத்தியில் உள்ள ராமர் கோயிலைச் சுற்றி அமிதாப் பச்சன் தொடர்ந்து நிலம் வாங்கி வருகிறார். அந்த வகையில் அயோத்தியில் ஏற்கனவே மூன்று இடங்களில் நிலம் வாங்கியிருக்கிறார்.
ராமர் கோயில் திறக்கப்படும் முன்பாக சுமார் நான்கரை கோடிக்கு 5 ஆயிரத்து 372 சதுர அடி நிலத்தை வாங்கினார். அதன் பிறகு சரயு நிறுவனம் மேம்படுத்திய நிலத்தில் 14 கோடியே 50 லட்சம் ரூபாய்க்கு நிலத்தை வாங்கினார்.
மேலும், அயோத்தியில் 54 ஆயிரம் சதுர அடி நிலத்தையும் அமிதாப் பச்சன் வாங்கினார். இதனை ரூ. 40 கோடி அளவில் வாங்கியிருந்த நிலையில் இப்போது புதிதாக 2.67 ஏக்கர் நிலத்தை வாங்கியிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
ரூ.35 கோடி மதிப்புள்ள இந்த புதிய நிலத்தை நீண்ட கால முதலீடு நோக்கில் அமிதாப் பச்சன் வாங்கியிருப்பதாக அவரது வணிக பரிவர்த்தனைகளை மேற்கொள்ளும் அபிநந்தன் லோதா என்பவர் வெளிப்படுத்தியுள்ளார்.

20 ஆண்டுகால கனவு: நெல்லையின் முதல் பெண் நடத்துனர் பகவதியின் நெகிழ்ச்சி பயணம்!
நெல்லையில் அரசு போக்குவரத்து கழகத்தில் முதல் பெண் நடத்துனராக பகவதி பணியாற்ற தொடங்கினார்
பகவதி 10 ஆண்டுகள் முயற்சி செய்து, தற்காலிக பேருந்து நடத்துனராக நெல்லையில் பணியாற்றுகிறார்
பெண்கள் இந்த துறையில் சாதிக்க முடியும் என்பதை பகவதி தனது வாழ்க்கை மூலம் உலகிற்கு எடுத்துக்காட்டுகிறார்
.png)





English (US) ·