Last Updated:Mar 08, 2026 10:26 AM IST
பொதுவாக ஜிம் அல்லது உடற்பயிற்சி மையங்கள் பெரும்பாலும் ஆண்களுடன் மட்டுமே தொடர்பு படுத்தப்பட்டிருந்தது. ஆனால் இன்று அந்த நிலைமைகள் மாறிவிட்டன.

மகளிர் தினம்
இன்றைய காலத்தில் பெண்களும் தங்களின் உடல்நலம் பராமரிப்பதில் அதிக கவனம் செலுத்தி வருகிறார்கள். இதன் காரணமாக ஜிம் மையங்களில் பெண்களின் பங்கேற்பு கணிசமாக அதிகரிப்பதை பார்க்க முடிகிறது. உடற்பயிற்சி என்பது உடலை அழகாக வைத்திருக்க மட்டும் அல்ல. அது ஒரு ஆரோக்கியமான வாழ்க்கை முறைக்கான முக்கியமான வழியாகும். தினமும் சிறிது நேரம் உடற்பயிற்சி செய்வதன் மூலம் பெண்கள் தங்கள் உடல் வலிமையை அதிகரிக்க உதவுவதோடு, மன அழுத்தத்தையும் குறைக்க பெரிதும் உதவுகிறது.
வேலைப்பளு, குடும்ப பொறுப்புகள் மற்றும் நாளாந்த வாழ்க்கை சவால்கள் ஆகியவற்றால் பெண்களுக்கு மன அழுத்தம் அதிகமாக இருக்கும். ஜிம் பயிற்சிகள் மற்றும் உடற்பயிற்சிகள் மனதையும் உடலையும் சுறுசுறுப்பாக வைத்துக்கொள்ள முடிவதாக ஜிம்மிற்கு வரும் பெண்கள் பலரும் தெரிவிக்கின்றன. இன்றைய சமுதாயத்தில் பல பெண்கள் வேலைக்கும் செல்லுகின்றனர். அதோடு வீட்டுப் பொறுப்புகளையும் கவனிக்கின்றனர். இந்த இரட்டை பொறுப்புகளைச் சமாளிக்க உடல் ஆரோக்கியம் மிகவும் அவசியம்.
அதனால் தான் அதிகமான பெண்கள் ஜிம் மையங்களை நாடி வருகின்றனர். காலை அல்லது மாலை நேரங்களில் ஜிம் சென்று உடற்பயிற்சி செய்வது அவர்களின் வாழ்க்கையில் ஒரு நல்ல முன்னேற்றத்தை உணர முடிவதாகவும் தெரிவிக்கின்றனர்.
ஜிம்முகளில் பெண்களுக்கு ஏற்ற பல்வேறு பயிற்சிகள் வழங்கப்படுகின்றன. கார்டியோ, யோகா, ஸ்ட்ரெங்க்த் ட்ரெயினிங், எடை குறைக்கும் பயிற்சிகள் போன்றவை பெண்களுக்கு உடல்நலத்தை மேம்படுத்த உதவுகின்றன. இந்த பயிற்சிகள் உடல் எடையை கட்டுப்படுத்துவதோடு மட்டுமல்லாமல், உடலின் வலிமையையும் அதிகரிக்கின்றன.
ஜிம் என்பது ஒரு உடல்நல பயிற்சி கூடமாக மட்டும் இல்லாமல் மற்றவர்களுடனும் பேசுவதற்கு சோசியலைஸ் செய்வதற்கான ஒரு இடமாகவும் இருக்கிறது.குறிப்பாக இளம் பெண்கள் மட்டுமல்லாமல், நடுத்தர வயதுடைய பெண்களும், இல்லத்தரசிகளும் கூட ஜிம் மையங்களில் கலந்து கொண்டு உடற்பயிற்சி செய்து வருகின்றனர்.
உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க
First Published :
Mar 08, 2026 10:26 AM IST
.png)




English (US) ·