Trains Cancelled: சென்னை புறநகர் ரயில்கள் ரத்து... எந்தெந்த ரயில்கள் ஓடாதுனு செக் பண்ணுங்க...

1 hour ago 17

Last Updated:Apr 17, 2026 6:51 PM IST

திருவாலங்காடு – அரக்கோணம் இடையே மட்டும் ரத்து செய்யப்பட்டுள்ளன. திருத்தணி – சென்னை சென்ட்ரல் நண்பகல் சேவையும் திருவாலங்காடு முதல் மட்டுமே இயக்கப்படும்.

சென்னை புறநகர் ரயில் ரத்து
சென்னை புறநகர் ரயில் ரத்து

அரக்கோணம் ரயில் யார்டில் நடைபெறும் பொறியியல் பணிகளை காரணமாகக் கொண்டு, சென்னை புறநகர் மின்சார ரயில் சேவையில் தற்காலிக மாற்றங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதனால் சில ரயில்கள் முழுமையாகவும், சில சேவைகள் பகுதி ரத்தாகவும் மாற்றப்பட்டுள்ளன.

அதன்படி, திருத்தணி – அரக்கோணம் வழித்தடத்தில் இரவு 9.15 மற்றும் 11.10 மணிக்கு இயக்கப்படும் மின்சார ரயில்கள் 19 முதல் 25ஆம் தேதி வரை ரத்து செய்யப்படுகின்றன. பயணிகள் மாற்று போக்குவரத்தை பயன்படுத்துமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதேபோல், அரக்கோணம் – திருத்தணி திசையில் அதிகாலை 4.00 மற்றும் 5.00 மணிக்கு இயங்கும் நான்கு ரயில்கள் 20 முதல் 26ஆம் தேதி வரை இயக்கப்படாது. அதிகாலை பயணிகளுக்கு இது சிரமத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும், சென்னை சென்ட்ரல் – அரக்கோணம் சேவைகளில் சில, திருவாலங்காடு – அரக்கோணம் இடையே மட்டும் ரத்து செய்யப்பட்டுள்ளன. திருத்தணி – சென்னை சென்ட்ரல் நண்பகல் சேவையும் திருவாலங்காடு முதல் மட்டுமே இயக்கப்படும். இந்த மாற்றங்கள் பராமரிப்பு பணிகளுக்காக மேற்கொள்ளப்பட்டுள்ளதால், பயணிகள் முன்கூட்டியே ரயில் நேரங்களை சரிபார்த்து பயணத்தை திட்டமிடுமாறு ரயில்வே நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

Read Entire Article